டாக்டர் முகமட் நோர் மனுகரன்

ஆலோசகர், அறம் செய்வோம் இயக்கம் 

அறப்பணி தொடர துணை நிற்போம்!

*************************************

டாக்டர் முகமட் நோர் மனுகரன்

ஆலோசகர், அறம் செய்வோம் இயக்கம் 


அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அறம் செய்வோம் இயக்கத்தின் அன்பர்கள் அனைவருக்கும்  வணக்கம். அன்புள்ளமும் சமுதாய உணர்வும் படைத்த நண்பர்களோடு சேர்ந்து இந்த அணியில் செயலாற்றுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. 

கல்வி, கல்விசார்ந்த நடவடிக்கைகள், அவசரத் சேவைகள், மருத்துவச் செலவு மற்றும் பல பொது விடயங்களுக்கு நம்மால் இயன்ற அளவு உதவிக் கரம் நீட்டி அரவணைத்து, ஆதரித்து பல நற்பணிகளைச் செய்து வரும் அறம் செய்வோம் இயக்க அன்பர்களை வாழ்த்தி வரவேற்றுக் கைக்கூப்பி வணங்குகிறேன்.


இந்தத் தொண்டு சிறியதாகத் தென்பட்டாலும், நம் சமுதாயத்தினர் தேவை என்று வரும்போது உடனடியாக முகம் சுளிக்காமல் உதவி நல்கி மற்றவரின் துன்பத்தைக் குறைக்கும் மனம் போற்றுதலுக்குரியது.  உதவி பெற்றோரின் முகங்களில் பூக்கும் புன்னகை நமது சேவைக்குக் கிடைக்கும் அங்கீகாரம் என்பேன்.

களைப்பறியாது சேவையில் ஈடுபடும் அணியின் செயற்குழு நண்பர்களுக்கும் நன்கொடை வழங்கி அறப்பணி தொடர துணையாக இருக்கும் உறுப்பினர்களுக்கும் மிக்க நன்றி.

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு. இந்தத் தொண்டு மேன்மேலும் சிறப்புடன் தொடர நாம் அனைவரும் தொடர்ந்து துணைநின்று ஆதரவு வழங்கிடுவோமாக!

நன்றி. வணக்கம்.

டாக்டர் முகமட் நோர் மனுகரன்